Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எண்ணம் காசு பக்கம் திரும்புச்சோ... ரஜினி மக்கள் மன்றம் கறார் வார்னிங்!

Advertiesment
எண்ணம் காசு பக்கம் திரும்புச்சோ... ரஜினி மக்கள் மன்றம் கறார் வார்னிங்!
, சனி, 19 டிசம்பர் 2020 (11:39 IST)
மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. 
 
ரஜினிகாந்த் சமீபத்தில் அரசியல் கட்சியில் தொடங்கி அரசியலில் ஈடுபடுவதை உறுதி செய்தார். டிசம்பர் 31 ஆம் தேதி அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிப்பேன் என்றும் வரும் தேர்தலில் தனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் கூறினார்.     
 
மேலும் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனா மூர்த்தி அவர்களும் தலைமை ஆலோசகராக தமிழருவி மணியன் அவர்களையும் அவர் நியமனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, பூத் கமிட்டி போன்றவற்றிற்கு நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறிமுகமானது ஒப்போ ஏ53 5ஜி : விலை விவரம் பின்வருமாறு.... !!