Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி அரசியலுக்கு வருவதால் அதிமுகவிற்கு பாதிப்பு இல்லை; எடப்பாடி பழனிசாமி

Webdunia
ஞாயிறு, 31 டிசம்பர் 2017 (13:31 IST)
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அரசியலுக்கு வருவதை இன்று உறுதி செய்த நடிகர் ரஜினிகாந்த், வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக கூறியுள்ளார். பல்வேறு அரசியல் நிகழ்வுகளால் ஓராண்டாக தமிழ்நாட்டுக்கும், தமிழ்மக்களும் பெரும் அவமானம் நிகழ்ந்திருக்கிறது. மக்கள் பெரிதும் துயரப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலில் இறங்குகிறேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், ரஜினி அரசியலுக்கு வருவதால் அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை என்றார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments