ராஜேந்திர பாலாஜி இன்று இரவு சிறையில் அடைக்க வாய்ப்பு?

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (18:02 IST)
விருதுநகர் மேஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி இன்று இரவு சிறையில் அடைக்க உள்ளதாக தகவல். 

 
ஆவின் துறையில் வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் ராஜேந்திரபாலாஜி கைது செய்ய போலீசார் முயற்சித்த போது அவர் தலைமறைவானார். 
 
கடந்த சில நாட்களாக தனிப்படைகள் அவரை தேடிவந்த நிலையில் சற்று முன் அவர் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி இன்று அல்லது நாளை சென்னை அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
இந்நிலையில் விருதுநகர் மேஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி இன்று இரவு சிறையில் அடைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் தந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AIIMS-உம் வராது, Metro Railஐயும் வரவிட மாட்டோம்.. மதுரையை வஞ்சிக்கும் பாஜக: முதல்வர் முக ஸ்டாலின்

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் மின்சார பேருந்து: சேவை தொடங்குவது எப்போது?

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கவே SIR பணியை எதிர்க்கின்றனர். அமித்ஷா குற்றச்சாட்டு

மிஸ் யுனிவர்ஸ் 2025: மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ் வெற்றி

7 கி.மீ. நீளம், 25 மீ. ஆழம், 80 அறைகள்.. ஹமாஸ் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல் ராணுவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments