காலையில் கட்சியில் சேர்ந்தா மாலையில் வேட்பாளர்! – சாத்தூரில் அமமுக சார்பில் ராஜவர்மன்!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (17:42 IST)
அதிமுகவில் சீட் தராததால் அமமுகவில் இணைந்த சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் அமமுக சார்பில் அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியலை அதிமுக நேற்று வெளியிட்டது. இதில் தற்போது சாத்தூர் எம்.எல்.ஏவாக உள்ள ராஜவர்மனுக்கு தொகுதி வழங்கப்படவில்லை. முன்னதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை வெற்றிபெற விட மாட்டேன் என ராஜவர்மன் பேசியிருந்த நிலையில் அவருக்கு தொகுதி வழங்காததற்கு ராஜேந்திரபாலாஜியின் அழுத்தம் காரணம் என அவரது ஆதரவாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலையில் அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்தார் ராஜவர்மன். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள அமமுக வேட்பாளர்கள் பட்டியலில் சாத்தூர் தொகுதி வேட்பாளராக ராஜவர்மன் அறிவிக்கப்பட்டுள்ளார். காலையில் கட்சியில் இணைந்து மாலையில் வேட்பாளரான இந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments