Publish Date: Tue, 22 Jun 2021 (12:18 IST)
Updated Date: Tue, 22 Jun 2021 (12:21 IST)
தமிழகத்தில் இன்று வெப்பசலனம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களிலும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.