Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!

Siva
வியாழன், 14 நவம்பர் 2024 (07:20 IST)
சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில், மிதமான மழை முதல் கனமழை வரையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
வங்கக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு வலுவிழந்ததன் காரணமாகவும், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாகவும், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதுடன், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில், இன்று காலை 10 மணி வரை சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல், சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில், இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென தாக்கிய இடி - மின்னல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பரிதாப பலி..!

இஸ்ரேல் போருக்கு AI தொழில்நுட்பம் வழங்கி உதவிய மைக்ரோசாப்ட்.. குவியும் கண்டனங்கள்..!

தனக்கு தானே குழந்தை பெற்று உயிருடன் புதைத்த நர்ஸிங் மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி.. இன்று 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை..!

திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments