Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Siva
வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (20:17 IST)
இன்று தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில், இன்று இரவு 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 
ஆனால், அதே நேரத்தில் பகல் நேரத்தில் அதிக வெப்பம் இருக்கும் என்றும், குறிப்பாக இயல்பை விட இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments