சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் இயல்பை விட அதிகமான வெப்பம் இருக்கும் எனவும், குறிப்பாக சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது, இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரம் போல் வெப்பம் கொளுத்திக் கொண்டிருக்கும் நிலையில், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும், சில நேரங்களில் மின்தடை ஏற்படும் போது பொதுமக்கள் மிகுந்த கஷ்டத்தை எதிர்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது வெப்பம் மற்றும் மழை குறித்த விவரங்களை தெரிவித்துவரும் நிலையில், சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்றும், இயல்பை விட இரண்டு முதல் நான்கு டிகிரி சென்டிகிரேட் அதிகமான வெப்பம் இருக்கும் என்றும் குறிப்பாக சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.