Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக் கடலில் காற்றழுத்தம்? தமிழகம் & கேரளத்தில் மழை நீடிக்கும்!

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (08:44 IST)
கேரளா  தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பலத்த மழை நீடிக்கும் வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை.

 
ஏற்கனவே தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

வட மேற்கு மற்றும் மத்திய மேற்கு கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அதன் பின்னர் அந்த தாழ்வு பகுதி தீவிரமடைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆம், கேரளா  தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பலத்த மழை நீடிக்கும் வாய்ப்புள்ளது.

மன்னார்  வளைகுடா பகுதி, மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதி, வடக்கு கர்நாடக கடலோரப் பகுதிகளில், மணிக்கு 60 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சென்னையை பொருத்தவரை பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என   குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments