இரவோடு இரவாக சென்னையை வெளுத்த மழை! விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

Prasanth Karthick
சனி, 24 மே 2025 (08:40 IST)

தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று முதலாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கேரளா, தமிழக மாவட்டங்களில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் இரவு வரையிலுமே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை என பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.

 

நேற்று இரவு பெய்து வந்த கனமழையால் சிங்கப்பூர், அகமதாபாத், விஜயவாடா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து சென்னை வந்த விமானங்கள், தரையிறங்க முடியாமல் வானிலேயே வட்டமடித்தப்படி இருந்தன. இந்நிலையில் இன்று மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி, புனே உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும், வேறு வழித்தடங்களில் இருந்து சென்னை வர வேண்டிய விமானங்களும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விமான பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

 

இன்றும் காலை முதலே சென்னை பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், சில இடங்களில் மழை பெய்தும் வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments