கோடை வெயில் காலத்திலும் தமிழகத்தில் உள்ள சில பகுதிகளில் ஆங்காங்கே மழை செய்து வருகிறது என்பதும் குறிப்பாக ஒரு சில மாவட்டங்களில் மழைக்காலத்தில் கூட இல்லாத அளவுக்கு சென்டிமீட்டர் கணக்கில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகள் பெய்த மழையின் அளவுகளை தற்போது பார்ப்போம்.
நீலகிரி மாவட்டம் குன்னூர், கோவை மாவட்டம் பில்லூர் அணை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் தேனி மாவட்டம் மஞ்சளாற்றில் 9 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் சிவகிரி, நீலகிரியில் கோத்தகிரி, பர்லியார், திருப்பூரில் மடத்துக்குளம் பகுதிகளில் தலா 8 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் ஆலக்கரை, பந்தலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் தலா 7 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று கூறியுள்ளது என்பது குறிப்பாக அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது