Publish Date: Wed, 18 Dec 2019 (15:54 IST)
Updated Date: Wed, 18 Dec 2019 (15:59 IST)
தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை சில நாட்களாக மழை பெய்து வந்தது. குறிப்பாக சென்னையில் சில நாட்கள் மிதமான மழை பெய்து வந்தது.
இந்நிலையில் தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வருகிற 20 ஆம் தேதி பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.