Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் திடீர் மழை: வெப்பம் நீங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (16:55 IST)
சென்னையில் திடீரென மிதமான மழை முதல் கன மழை வரை பெய்ததால் சென்னையில் பல பகுதிகளில் வெப்பம் நீங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த சில நாட்களாக சென்னையில் அனல் கொதிக்கும்வகையில் வெப்பம் இருந்தது என்பதும் இதனால் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் உட்பட அனைவரும் சிரமப்பட்டனர் என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் திடீரென சென்னையில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனாம்பேட்டை ராயப்பேட்டை ஆயிரம் விளக்கு அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. 
 
இன்று காலை முதல் சென்னை முழுவதும் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி அடுத்தடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் நடக்கவிருந்த சென்னை நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து.. போட்டி ஒத்திவைப்பு..!

எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் மீண்டும் வரும் பெண்களின் அந்தரங்க வீடியோ.. சென்னை ஐகோர்ட் வேதனை..!

டிகிரி இருந்தா போதும்.. கூட்டுறவு சங்கங்களில் 2000 உதவியாளர் வேலை! - உடனே அப்ளை பண்ணுங்க!

3வது நாளாக இன்றும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.75000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

பறிபோன ஐ.டி வேலை.. கழுத்தை நெறித்த கடன்! கொள்ளையனாக மாறிய ஐ.டி ஊழியர்!

அடுத்த கட்டுரையில்
Show comments