சென்னையின் முக்கிய பகுதிகளில் திடீர் மழை: சாலைகளில் மழைநீர்!

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (20:30 IST)
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக அடுத்த வாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் சற்று முன் சென்னையின் முக்கிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சென்னை மெரினா கடற்கரை, திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை , மயிலாப்பூர், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த மழை காரணமாக சம்பந்தப்பட்ட இடங்களில் மழை நீர் சாலைகளில் ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம், வெள்ளி விலை இன்று உயர்வா? சரிவா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

6 அபாயகரமான நாய் இனங்களுக்கு தடை: மீறி வளர்த்தால் நாய்கள் கைப்பற்றப்படும்: அதிரடி சட்டம்..!

பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி அடிக்கடி மறந்து விடுகிறார்: முதல்வர் ஸ்டாலின்..!

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க அனுமதிக்க முடியாது. ஆர்.எஸ். பாரதி மனுவை தள்ளுபடி செய்வேன்: நீதிபதி அதிரடி..!

தமிழகத்தில் பீகாரிகள் அவமதிக்கப்படுகிறார்களா? பிரதமரின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments