அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (10:44 IST)
இன்னும் 3 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மற்றும் வடமேற்கு பருவமழை, கீழ் அடுக்கு சுழற்சி உள்பட பல்வேறு காரணங்களால் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
குறிப்பாக தமிழகத்தில் மாண்டஸ் புயல் கரையை கடந்த போது கனமழை பெய்தது என்பதும் இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பல நீர்நிலைகள் நிரம்பி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்னும் 3 மணி நேரத்தில் சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே இன்று காலை சென்னையில் உள்ள ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் கஷ்டத்தில் இருக்காங்க!.. முதல்வர் தூங்குகிறார்.. கொந்தளித்த விஜய்

11 வருஷமா ஒன்னுமே கொடுக்கல!.. ரிசல்ட் தெரியும் போல!.. பாஜகவை விமர்சிக்கும் ஸ்டாலின்!...

இறப்பதற்கு சில நிமிடத்திற்கு முன் செல்போனில் பேசி அஜித் பவார்.. யாரிடம் பேசினார்?

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் 3 சிறுமிகள் தற்கொலை!.. ஐயோ பாவம்!...

9வது மாடியில் இருந்து குதித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் தற்கொலை.. கடிதத்தில் என்ன இருந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments