ஒரு மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழை: எந்தெந்த மாவட்டங்களில்?

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (07:38 IST)
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் உள்பட பல பகுதிகளில் மிதமான மழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்தது என்பதும் இதனால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்னும் ஒரு மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கோயம்புத்தூர் தென்காசி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்னும் ஒரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 இருப்பினும் மற்ற பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை என தெரிகிறது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோலக்ஸை சுற்றி வளைத்த 4 கும்கி யானைகள்! கோவையில் பிடிப்பட்ட ரோலக்ஸ் காட்டு யானை!

ரஜினிகாந்தை திடீரென சந்தித்த ஓபிஎஸ்.. புதிய கூட்டணி உருவாகிறதா?

நெருங்கும் தீபாவளி: ராக்கெட் வேகத்தில் அதிகரித்த விமானக் கட்டணங்கள்!

தொடங்கியது வடகிழக்கு பருவமழை: சென்னையில் விடிய விடிய மழை.. இன்றைய மழை நிலவரம்..!

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments