தெற்கு கேரளா, அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒரு பக்கம் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்திக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது கோடை வெயிலில் தத்தளித்துக் கொண்டிருந்த பொது மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இன்று நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.