Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (13:28 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வரும் நிலையில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும். 
 
மேலும் நாளை தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை நேரத்தில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் தென் தமிழக கடலோர பகுதிகளில் 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

கோடை விடுமுறை எதிரொலி: முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள்.. தெற்கு ரயில்வே முடிவு

அமெரிக்காவில் உள்ள முக்கிய பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments