Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் மீண்டும் மழை.. 6 நாட்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (13:18 IST)
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்தது என்பதும் குறிப்பாக மிக்ஜான் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையே ஸ்தம்பித்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தமிழகத்தில் 6 நாட்களுக்கு மீண்டும் மழை பொழியும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று முதல் ஆறு நாட்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள பல பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்யும் என்றும் சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகரில் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் டிசம்பர் 9ஆம் தேதி  நீலகிரி, கோயம்புத்தூர்,திருப்பூர் , தேனி, திண்டுக்கல்,  மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments