Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை! – திருச்சியில் ஆய்வு!

Trichy
, வியாழன், 7 டிசம்பர் 2023 (10:40 IST)
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தண்ணீரை உடனடியாக அகற்ற 20 எச்பி டீசல் மோட்டார் கொண்ட பம்பிங் ஸ்டேசன் அமைக்கப்பட்ள்ளதை மேயர் மு. அன்பழகன்  நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர்கள்,செயற் பொறியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் நேரில் ஆய்வு செய்தார்.


 
திருச்சி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக  மாநகராட்சி பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கும் டோபி காலனி , ராஜீவ் காந்தி நகர் , ஆதிநகர் , பாத்திமா நகர் , ஏயுடி நகர் , கிருஷ்ணாபுரம் ,  ஆர்.எம்.எஸ்.காலாணி, கோரை ஆறு சொசைட்டி காலனி, துளசிங்க நகர் ஆகிய இடங்களில் பெரிய வாய்க்கால் பகுதிலிருந்து தண்ணீர் வராமல் தடுக்க புதிதாக தடுப்பு சட்டர் அமைக்கப்பட்டுள்ளது

தண்ணீரை உடனடியாக அகற்ற 20 எச்பி மின் மோட்டார் கொண்ட பம்பிங் ஸ்டேசன் அமைக்கப்பட்ள்ளதை  மேயர் மு. அன்பழகன்  மாநகராட்சி நகரப் பொறியாளர் சிவபாதம்,மண்டல தலைவர்கள்,செயற் பொறியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் நேரில் ஆய்வு செய்தார்.

நகராட்சி நிர்வாக துறை  அமைச்சர்  கே. என். நேரு , உத்தரவின் பேரில் திருச்சி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 5மண்டலங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டார்கள் , ஆயில் இன்ஜின்கள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் சுகாதார பணிகளுக்கு புகை மருந்து அடிக்கும் இயந்திரம் ஆகியவை தயார் நிலையில் இருப்பதை  மேயர் மு. அன்பழகன்  மண்டல குழு தலைவர் மற்றும் அலுவலர்களுடன் பார்வையிட்டார்.

மழை அதிக அளவு பெய்தால் மழை நீரை உடனடியாக வெளியேற்றுவதற்கான முன்னெற்ப்பாடு பணிகள் தயார் நிலையில் இருப்பதாக மாண்புமிகு மேயர்  தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது நகர பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர்கள் துர்கா தேவி ,விஜயலட்சுமி கண்ணன், செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென நடு ரோட்டில் பற்றி எரிந்த கார்! அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!