Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை மையம்..!

Webdunia
ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (12:43 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

வடகிழக்கு பருவ மழை மற்றும் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்தது என்பதும் சில பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, அரியலூர்,  நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் மேற்கண்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments