Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் மீண்டும் மழை –வானிலை ஆய்வு மையம் !

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2018 (08:23 IST)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி சீரான இடைவெளியில் மழை பெய்து வருகிறது. ஒரு வாரமாக மழை இல்லாத நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் நாளை முதல் பரவலாக மழைப் பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை தாமதாகவேத் தொடங்கியது. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மிதமான மழைப் பெய்து வருகிறது. சென்ற மாதம் வீசிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்ப்பாமல் தவித்து வருகின்றன.

இதையடுத்து தற்போது மீண்டும் டிசம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் புதுச்சேரி மற்றும் கடலூர் போன்ற கடலோர மாவட்டங்களில் மிதமான அளவிற்கு மழைப் பெய்ய்யும் எனவும். சென்னையில் ஓரிரு இடங்களில் மிகக் குறைந்த அளவில் மழைப் பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments