''ஒடிசா ரயில் விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்விபத்திற்குப் பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவின் ஷாலிமார்- சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (ஜூன் 2) சென்னை நோக்கி வந்தபோது, ஒடிஷா மாநிலம் பாலாசோர் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த ரயில் தடம்புரண்டு மற்றொரு தண்டவாளத்தில் விழுந்ததில், பெங்களூரில் இருந்து கொல்கத்தா நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் தடம்புரண்டு, கோரமண்டல் விரைவு ரயில் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த கோர விபத்திற்கு உலகத் தலைவர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட பிரதமர் மோடி சற்றுமுன் ஒடிசா வந்தடைந்தார். புவனேஷ்வர் விமான நிலையத்திலிருந்து விபத்து பகுதிக்கு அவர் ஹெலிகாப்டரில் வந்தடைந்தார்.
இந்த நிலையில், ஒடிஷா ரயில் விபத்து பற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி சுமார் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டு. விபத்திற்கான உண்மையான காரணம் குறித்து அரசு உடனடியாகக் கண்டறிந்து வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். ரயில் விபத்திற்குப் பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.