கடலூர் பேருந்து நிலையக் கடைகளில் சோதனை… சிக்கியது என்ன?

Webdunia
சனி, 6 அக்டோபர் 2018 (16:39 IST)
கடலூர்  மாவட்டப் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தலைமையில் அதிகாரிகள் இன்று கடலூர் மாவட்டப்பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், குளிர்பான நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகள் போன்றவற்றில் திடீரென சோதனை நடத்தப்பட்டது. 50க்கும் மேற்பட்ட கடைகளில் அவர்கள் இந்த சோதனையை நடத்தினர்.

அப்போது சில கடைகளில் இருந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பயன்பாட்டு காலம் முடிந்த மற்றும் அறிவிக்கப்படாத பொருட்கள் அழுகும் தருவாயில் இருந்த பழங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.

கடை உரிமையாளர்களை ஆரோக்யமான பொருட்களை மட்டுமே விற்கவேண்டும் என எச்சரித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்தான் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இதே போன்ற சோதனையில் 200 கிலோ குட்கா பொருட்கள் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக அரசுக்கு முட்டு கொடுப்பதன் மூலம் தனித்தன்மையை இழந்து வரும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்: அரசியல் விமர்சகர்கள்

தூய்மை பணியாளர்கள் கொரானோ காலத்தில் தியாகிகள்.. இப்போது கண்டுகொள்ளப்படாதவர்களா?

ஒரு பெண்ணின் ஒரு நாள் உரிமை என்பது வெறும் ரூ.33 தானா? ரூ.1000 உரிமை தொகை குறித்து நந்தகுமார் கேள்வி..!

வைகோ நடைபயண அழைப்பிதழில் பிரபாகரன் படம்: அதிருப்தியில் புறக்கணித்த காங்கிரஸ்!

சோத்த திங்கிறியா இல்ல... இந்து அமைப்பினரிடம் கடுப்பாகி கத்திய சேகர் பாபு!...

அடுத்த கட்டுரையில்
Show comments