Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராகுல் காந்தி விசிட்.. ஒரே நாளில் இந்திய அளவில் ட்ரெண்டிங்! – யூட்யூப் சேனலுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

ராகுல் காந்தி விசிட்.. ஒரே நாளில் இந்திய அளவில் ட்ரெண்டிங்! – யூட்யூப் சேனலுக்கு குவியும் வாழ்த்துக்கள்!
, சனி, 30 ஜனவரி 2021 (12:50 IST)
தமிழக கிராம உணவுகளை தயாரிக்கும் குழுவுடன் ராகுல்காந்தி உணவருந்தியதை தொடர்ந்து அந்த குழுவின் யூட்யூப் சேனல் இந்திய அளவில் பிரபலமாகியுள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சில சமையல் கலைஞர்கள் இணைந்து சமையலுக்கான யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். அசைவ உணவு பொருட்களை பெருமளவில் சமைக்கும் அவர்கள் அதை அருகிலுள்ள முதியோர், ஆதரவற்றோர் காப்பகத்திற்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் வந்த ராகுல்காந்தி அந்த கிராமத்திற்கு சென்று அந்த சமையல் கலைஞர்களை சந்தித்துள்ளார். ராகுல் காந்திக்காக பிரத்யேகமாக அவர்கள் தயாரித்த காளான் பிரியாணியை ஓலைப்பாயில் அமர்ந்து சகஜமாக சாப்பிட்ட ராகுல் காந்தி, காளான் பிரியாணி சுவையாக இருப்பதாகவும், அடுத்த முறை தான் வரும் போது ஈசல் செய்து தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
webdunia

ராகுல் காந்தியின் இந்த வருகையை தொடர்ந்து அந்த சமையல் கலைஞர்களின் யூட்யூப் சேனலான Village Cooking Channel தேசிய அளவில் பிரபலமாகியுள்ளது. பல மொழியை சேர்ந்தவர்களும் அந்த யூட்யூப் சேனலுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில் ட்ரெண்டிங் வீடியோக்களில் நம்பர் 1 ஆக இந்த வீடியோ இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தலே வரல.. அதுக்குள்ள தன்னை முதல்வராவே நினைச்சிக்கிட்டார்! – ஸ்டாலின் குறித்து சரத்குமார் கருத்து!