Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராகுல்காந்திக்கு பொங்கல், வடையுடன் விருந்து வைத்த மு.க.ஸ்டாலின்

Advertiesment
, ஞாயிறு, 4 ஜூன் 2017 (22:57 IST)
பொதுவாக திமுகவுடன் கூட்டணி வைப்பதை சோனியா காந்தி விரும்பினாலும் ராகுல்காந்தி விரும்பியதில்லை. கருணாநிதி மீது அவருக்கு என்றைக்குமே நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை.



 


இந்த நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் படுபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதால் ,அதை தூக்கி நிறுத்த திமுகவுடன் கைகோர்ப்பதை தவிர வேறு வழியில்லை என்பதை ராகுல்காந்தி நன்கு உணர்ந்திருக்கின்றார்.

மேலும் ஸ்டாலின் மீது நல்ல அபிப்பிராயம் வைத்திருந்த ராகுல்காந்தி அவருக்காகவே 'கருணாநிதி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார். இந்த நிலையில் சென்னை ஆழ்வார்புரத்தில் உள்ள முக ஸ்டாலின் வீட்டிற்கு சென்றார் ராகுலாந்தி. ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, அவரது மகள் செந்தாமரை, மருமகன் சபரீஷன் மற்றும் மு.க.ஸ்டாலினின் பேரக்குழந்தைகள் ஆகியோர் வீட்டு வாசல் வரை வந்து ராகுலை வரவேற்று வீட்டிற்குள் அழைத்து சென்றனர்.

முக ஸ்டாலின் வீட்டில் ராகுல் காந்திக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. அதோடு, ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினும், செந்தாமரையும் நெய்மணக்கும் சக்கரைப் பொங்கல் மற்றும் வடை ஆகியவற்றை பரிமாறினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவிகோவுக்கு இரங்கல், கருணாநிதிக்கு மெளனம்: ரஜினியின் சாணக்கிய அரசியல்