Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகம் வருகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல்: பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு..!

Advertiesment
தமிழகம் வருகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல்: பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு..!
, வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (10:14 IST)
நாடாளுமன்ற மழை கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவு பெறுவதை அடுத்து நாளை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சமீபத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக மீண்டும் எம்பி பதவியை பெற்ற ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் ஆவேசமாக மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசினார். 
 
இந்த நிலையில் நாளை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தமிழகத்தில் உள்ள உதகமண்டலத்திற்கு வர இருக்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் ராகுல் காந்தி அதன்பின் கார் மூலம் உதகமண்டலம் செல்கிறார். 
 
உதகையில் தன்னார்வ அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் அவர் அங்கிருந்து தனது சொந்த தொகுதியான வயநாடு செல்வதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். 
 
காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்தி தமிழகம் வர இருப்பதை அடுத்து அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க கட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மது அருந்தியதே இளைஞரின் இறப்புக்கு காரணம்.. பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து மின்வாரியம்..!