மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை.. அவை குறிப்பில் இருந்து நீக்கம் குறித்து ராகுல் கருத்து..!

Mahendran
செவ்வாய், 2 ஜூலை 2024 (12:12 IST)
நேற்று பாராளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய சில கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மோடியின் உலகில் உண்மைக்கு இடம் இல்லை என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
நான் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதால் உண்மை மாறிவிடாது என்றும் ராகுல் காந்தி இன்று தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு காங்கிரஸ் கட்சியை மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
 
 நேற்று ராகுல் காந்தி பேசியபோது சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அந்த வரிகளை அவை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார்.
 
இந்து மதம் குறித்து சர்ச்சுக்குரிய வகையில் பேசியது, அதானி அம்பானி குறித்த விமர்சனம், நீட் தேர்வு ந மற்றும் அக்னிபாத் திட்டம் குறித்து ராகுல் காந்தி பேசியது ஆகியவை அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட கருத்துக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள நடிகை பாலியல் வழக்கு: 6 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு.. எத்தனை ஆண்டு சிறை?

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கிஸ் முகமதி கைது: ஈரான் அரசு அதிரடி..!

16% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழகம் முதலிடம்: ரிசர்வ் வங்கி தகவல்

மகளிர் உரிமை தொகை இன்னும் உயரும்.. முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு..!

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

அடுத்த கட்டுரையில்
Show comments