டெல்லியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (13:17 IST)
இந்தியா முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறது என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்ற முன்னணி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும், அதுமட்டுமின்றி ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி இருக்கும் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு இருந்தனர் 
 
இந்த நிலையில் இன்று காலை முதல் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் டெல்லியில் ராகுகாந்தி தலைமையிலும், டெல்லியின் இன்னொரு பகுதியில் பிரியங்கா காந்தி தலைமையிலும் போராட்டம் நடத்தப்பட்டது
 
இந்த நிலையில் டெல்லியில் உள்ள சாலையில் அமர்ந்து அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரையும் தனித்தனியே டெல்லி காவல்துறை கைது செய்தது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
விலைவாசி உயர்வு, உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி உள்பட பல்வேறு மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments