Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம்! – கூட்டணிக்கு கொக்கி போட்ட ராகுல்காந்தி!

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (16:55 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணி குறித்த சர்ச்சைகள் எழுந்த நிலையில் ராகுல்காந்தி பேச்சு பிரச்சினைக்கு முடிவை கொண்டு வந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக ஒரு புறம் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்து, பாஜகவுடன் கூட்டணியையும் அறிவித்துவிட்டது.

இந்நிலையில் திமுக முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலினை அறிவித்திருந்தபோதும் கூட்டணி உறுதி படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸும், திமுகவும் தனித்தனியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அரவக்குறிச்சியில் பேசி வரும் ராகுல்காந்தி ”திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம். காங்கிரஸ் – திமுக இடையேயான நல்லுறவு தொடர்கிறது” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments