கோவை தனியார் கல்லூரியில் ராகிங் கொடுமை! – 7 மாணவர்கள் கைது!

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (10:39 IST)
கோவையில் பிஎஸ்ஜி தனியார் கல்லூரியில் ஜூனியர் மாணவரை ரேகிங் செய்த 7 சீனியர் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சேரும் புதிய மாணவர்களை சீனியர் மாணவர்கள் கொடுமைப்படுத்தும் ரேகிங் சம்பவங்கள் தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. ஆனால் அதையும் தாண்டி சில கல்லூரிகளில் சீனியர் மாணவர்களின் ரேகிங் கொடுமைகள் அவ்வபோது நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கோவையில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரியில் சீனியர் மாணவர்கள் சேர்ந்து ஜூனியர் மாணவர் ஒருவரிடம் மது அருந்த பணம் கேட்டதாகவும், அவர் தராததால் தலையை மொட்டியடித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சம்பந்தப்பட்ட 7 மாணவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments