Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அண்ணா எங்கள அடிக்குறாங்க: கதறிய மாணவர்கள், கண்ணீர் விட்டு அழுத ராகவா லாரன்ஸ்! (வீடியோ இணைப்பு)

அண்ணா எங்கள அடிக்குறாங்க: கதறிய மாணவர்கள், கண்ணீர் விட்டு அழுத ராகவா லாரன்ஸ்! (வீடியோ இணைப்பு)

அண்ணா எங்கள அடிக்குறாங்க: கதறிய மாணவர்கள், கண்ணீர் விட்டு அழுத ராகவா லாரன்ஸ்! (வீடியோ இணைப்பு)
, திங்கள், 23 ஜனவரி 2017 (12:06 IST)
தமிழகத்தில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை மூலம் தமிழக அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் அராஜகத்தால் தமிழகத்தில் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னை கலவர பூமியாக மாறியுள்ளது.


 
 
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நிரந்தர தீர்வு வேண்டும் என இளைஞர்கள், மாணவர்கள் உலகமே போற்றும் விதமாக அறவழியில் போராடி வந்தனர். இந்திய வரலாற்றில் இப்படியொரு போராட்டம் நடந்ததே இல்லை என தமிழக இளைஞர்களையும், மாணவர்களையும் மெச்சுகின்றனர்.
 
ஆனால் இப்படி அறவழியில் தங்கள் உரிமையை மீட்க போராடிய மாணவர்களையும், இளைஞர்களையும் காவல்துறை வலுக்கட்டாயமாக போதிய அவகாசம் கொடுக்காமல் அப்புறப்படுத்தினர். போராட்டக்காரர்களை அடித்து, அராஜகமாக இழுத்து அந்த இடத்தை விட்டு அகற்றினர் போலீசார்.

 
இதனை ஊடகங்கள் நேரலையாக ஒளிபரப்பியதை பார்த்து மக்கள் கொதித்துள்ளனர். அமைதியாக போராடிய மாணவர்களிடம் போலீசார் இப்படியா நடந்துகொள்வது என அரசுக்கு எதிராக மக்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.
 
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த நடிகர் ராகவா லாரன்ஸ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மாணவர்களிடம் போலீசார் அராஜகமாக நடந்துகொண்டதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
 
இதனையடுத்து அவர் சென்னை மெரினாவுக்கு சென்று மாணவர்களை காப்பாற்ற வேண்டும் அவர்கள் கடலுக்கு சென்று போராட்டம் நடத்தக்கூடாது அவர்களை தடுக்க வேண்டும் மாணவர்களுடைய நலன் மற்றும் உயிர் முக்கியம் என விரைந்தார்.
 
ஆனால் ராகவா லாரன்ஸ் சென்னை மெரினாவில் நுழையக்கூடாது என அவர் சென்ற அனைத்து வழிகளிலும் அவரை போலீசார் தடுத்துள்ளனர். இந்நிலையில் டுவிட்டரில் அழுதவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ். அதில் போராட்டக்களத்தில் தங்களை போலீஸ் அடிப்பதாக பெண்கள், மாணவர்கள் தனக்கு போன்செய்து அழுததாக கூறி கண் கலங்கினார்.
 
மாணவர்கள் யாரும் கடலுக்குள் சென்று தண்ணீரில் போராட்டம் நடத்துக்கூடாது என அவர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் தான் எப்படியாவது ஒரு மணி நேரத்தில் அங்கு வந்துவிடுவேன் எனவும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீட்டாவின் தலைமை செயலகம் முற்றுகை: வலுக்கும் எதிர்ப்புகள்!!