Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வறுத்தெடுக்கும் சீமான்; பாயாமல் பம்மும் ராகவா லாரன்ஸ்?

Advertiesment
வறுத்தெடுக்கும் சீமான்; பாயாமல் பம்மும் ராகவா லாரன்ஸ்?
, வியாழன், 12 டிசம்பர் 2019 (16:20 IST)
சீமானை கடவுள் பார்த்துக் கொள்வார் என நடிகர் ராகவா லாரன்ஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை ஒரு சில இடங்களில் மறைமுகமாகவும் சில இடங்களிலும் நேரடியாகவும் தாக்கி பேசினார்.
 
சீமான் பேச்சு நாட்டிற்கு நல்லதல்ல என்று ராகவா லாரன்ஸ் பேசிய நிலையில் இந்த வயதில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டியதன் அவசியம் என்ன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
 
ரஜினிகாந்த் புகழுக்காகவும் பணத்துக்காகவும் பப்ளிசிட்டிக்காகவும் அரசியலுக்கு வரவில்லை என்றும், அவரை வைத்துதான் மற்றவர்கள் பப்ளிசிட்டி செய்து வருவதாகவும் அவர் சீமானை மறைமுகமாக குறிப்பிட்டார்.
webdunia
இந்த நிலையில் ராகவா லாரன்ஸ்ஸின் இந்த பேச்சுக்கு சீமான் பதிலடி கொடுத்துள்ளார். தம்பி ராகவா லாரன்ஸ் கூறுவது எந்த நாட்டிற்கு என்று தெரியவில்லை. நான் என் நாட்டிற்காக பேசி வருகிறேன் என்று கூறியுள்ளார். 
 
இந்நிலையில் இன்று ரஜினியின் 70வது பிறந்த நாளை ஒட்டி சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் ரசிகர்கள் சார்பில் நடத்தப்பட்ட கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டார்.
 
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். ரஜினி அரசியலுக்கு வரும்பட்சத்தில் நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு தனக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்று கூறினார். 
 
அதனைத்தொடந்து சீமான் உங்களை விமர்சிப்பை பற்றி என்ன நினைக்கிறார்கள் என கேட்ட போது தன்னை விமர்சித்து வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைபாளர் சீமானை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று பதிலளித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தியேட்டருக்கு ஸ்னாக்ஸ் கொண்டு போகலாமா? – குழப்பத்தில் திரையரங்குகள்!