Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அருண்விஜய் விவகாரம் : தலைகாட்ட முடியாத ராதிகா சரத்குமார் : பின்னணி என்ன?

தலைகாட்ட முடியாத ராதிகா சரத்குமார் : பின்னணி என்ன?

Advertiesment
அருண்விஜய் விவகாரம் : தலைகாட்ட முடியாத ராதிகா சரத்குமார் : பின்னணி என்ன?
, வியாழன், 1 செப்டம்பர் 2016 (12:50 IST)
மதுபோதையில் காரை ஓட்டி போலீசாரின் வாகனத்தில் மோதியதாக நடிகர் அருண்விஜய் மீது வழக்கு தொடரப்பட்ட சம்பவம் சமீபத்தில் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.



சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் ரெய்னாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் சினிமா திரையுலகை சேர்ந்த பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மதுவிருந்தும் அளிக்கப்பட்டது.

பிரபலங்கள் பலர் மது அருந்திவிட்டு ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்து செல்பி எடுத்தனர்.அந்த விழாவில் கலந்து கொண்ட, தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ், ஜெயம் ரவி, சுந்தர் சி. குஷ்பு சுந்தர், ரம்யா கிருஷ்ணன், மதுபாலா, உள்ளிட்ட பலரும் போதையில் மிதந்ததாக கூறப்படுகிறது.

இந்த விருந்து முடிந்து குடி போதையுயில், வீடு திரும்பும் போதுதான் விபத்து ஏற்படுத்தி, காவல்துறையினரிடம் அருண்விஜய் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நிகழ்ச்சியில் மதுவிருந்து அளிக்கப்பட்டது வெளியே தெரியக்கூடாது என்று ராதிகா கவனமாக இருந்தாராம். குடிபோதையில் மிதந்த பல நடிகர், நடிகைகள் பத்திரமாக வீட்டிற்கு சென்று விட்ட நிலையில் அருண்விஜய் மட்டும் போலீசாரிடம் மாட்டிக் கொண்டது ராதிகாவை அப்செட் ஆக்கியுள்ளதாம்.

எல்லோரும் இதுபற்றியே கேட்க, ராதிகாவால் வெளியே தலை காட்டமுடியவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாயில் மது ஊற்றி சிறுமி பாலியல் வன்கொடுமை