Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீபாவிற்கு என்ன நிலையோ அதுதான் விஷாலுக்கும் - ராதாரவி நக்கல்

Advertiesment
தீபாவிற்கு என்ன நிலையோ அதுதான் விஷாலுக்கும் - ராதாரவி நக்கல்
, செவ்வாய், 5 டிசம்பர் 2017 (10:49 IST)
ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷால் வெற்றி பெற மாட்டார் என நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார்.


 
ஏற்கனவே நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்கு தமிழ் திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. அந்நிலையில், விஷால் நேற்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார்.
 
இந்நிலையில் அவரின் வெற்றி வாய்ப்பு பற்றி நடிகர் ராதாரவி ஒரு பிரபல வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
அவர் அரசியலுக்கு வருவார்னு நான் எதிர்பார்த்தேன். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 150 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் விஷால் அணி வெற்றி பெற்றது. ஆர்.கே.நகரில் 3 லட்சம் ஓட்டுக்கள் இருக்கிறது. அவர்கள் எப்படி விஷாலுக்கு ஓட்டு போடுவார்கள்?
 
திமுக, அதிமுக வேட்பாளர்கள் பேசினால் மக்கள் கேட்பார்கள். விஷால் பேசினால் வந்து பார்ப்பார்கள் அவ்வளவுதான். ஆர்வக்கோளாறில் இப்படியெல்லாம் செய்கிறர். ஆர்.கே.நகரில் தீபாவுக்கு என்ன நிலையோ அதுதான் விஷாலுக்கும்” என தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2ஜி வழக்கு ; டிச.21ம் தேதி தீர்ப்பு : உச்ச நீதிமன்றம அறிவிப்பு