Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

J.Durai

, செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (17:43 IST)
மதுரை வேடர் புளியங்
குளத்தில் ,
புதிய பேருந்து பயணிகள் நிழல்குடை திறப்பு விழா மற்றும் தென்பழஞ்சி பகுதியில் நாடக மேடை திறப்பு விழா நடைபெற்றது. 
 
இதில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்,
கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
 
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில்....
 
மது ஒழிப்பு மாநாடு குறித்த கேள்விக்கு:
 
திருமாவளவன் தனக்கென ஒரு லட்சியம், குறிக்கோளை வைத்து தனது இயக்கத்தை நடத்தி வருகிறார். அவருடைய வார்த்தை மிகவும் மதிப்
பளிக்கப்பட வேண்டியது. இந்தியா கூட்டணியை பொறுத்தவரை அனைவரும் சேர்ந்து உழைத்து தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும் என, நினைக்கிறோம். 
 
மதுரை விமானநிலையை 24 மணி நேர சேவை குறித்த கேள்விக்கு:
 
மத்திய அமைச்சர் ராம் நாயுடுவை நாடாளுமன்ற அவையின் போது தென் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேருடன் சென்று சந்தித்தோம். 
 
அப்போது நாங்கள்
வைத்த மிக முக்கியமான ஐந்து கோரிக்
கைகளில் 
இது முதல் கோரிக்கை.மதுரை விமான நிலையத்தை 24 மணி நேர சேவையாக்
குவதற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று ஏற்கனவே, அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்திருந்
தோம். அதை அவர்கள் அறிவித்ததற்கு பிறகு இந்த 24 மணி நேர சேவையை தொடங்க வேண்டும் என, வலியுறுத்தினோம். இந்த நிலையில் இதற்கு முன்பு மதுரை விமான நிலைய இயக்குனராக இருந்த சுரேஷ் தற்போது இந்திய விமானத்துறை ஆணைய பொறுப்புத் தலைவராக பதவி
யேற்றுள்ளார். அவரிடமும் பேசியிருந்தோம் அவர் முயற்சியால் முதல் படியை தாண்டி உள்ளோம். சர்வதேச விமான நிலையம் மற்றும் ஓடுதள பாதை விரிவாக்கம் போன்ற வேலைகளும் அடுத்தடுத்து நடக்கும் என, நினைக்கிறேன். விமான நிலைய நிறுவனங்கள் அக்டோபர் மாதம் முதல் 24 மணி நேர சேவையை பயன்படுத்த தற்போது விமானத்துறை தயாராகி உள்ளது மகிழ்ச்சியான செய்தி என்றார்.
 
காங்கிரஸ் சார்பாக ஆட்சி அதிகார பங்கு கேட்கப்படுமா என்ற கேள்விக்கு:
 
காங்கிரஸ் கட்சி செயற்குழு வருகிற 19ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடை
பெறுகிறது. அந்த செயற்
குழுவில் உங்கள் ஆலோசனையும் ஆலோசிக்
கப்படும். காங்கிரஸ் கட்சியை பொறுத்த அளவில் இதைப்பற்றி பொது
வெளியில் பேசுவதில்லை. 2006 இல் திமுக 96 இடங்களில் இருந்தபோது 36 சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த அரசை முழுமையாக ஆதரித்து அந்த அரசுக்கு துணை நின்றோம். எங்களைப் பொறுத்தளவில் கூட்டணி அமைச்
சரவையில் இடம் பிடிக்க வேண்டுமா என்பது அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களும் சேர்ந்து முடிவெடுப்பது. ஆனால், தமிழகத்தை பொறுத்த அளவில் கேரளாவை போல அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிய காலம் வந்து விட்டதோ என்ற நிலையை உருவாகி இருக்கிறது. எந்த கூட்டணியாக இருந்தாலும், அந்த கூட்டணியின் அதிகார பரவலாக்கமும், கொள்கை சம்பந்தப்பட்ட கூட்டணி அதே நேரத்தில் அதிகாரத்திலும், ஆட்சியிலும் பங்கு என்கிற நிலை வருவதற்கான காலம் வந்துவிட்டது போல தெரிகிறது. ஏனென்றால், தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து இப்போது வெற்றி பெற வேண்டிய நிலையில் இருக்கிறது. தனியாக கட்சிகள் வெற்றி பெறாத நிலை உருவாகி இருக்கிறது. இதே காலம்தான் அதற்கு பதில் சொல்லும். எங்களைப் பொறுத்தவரை இதை போன்ற விஷயங்களை பத்திரிகையில் பேசுவதை 
விட கட்சி ஒருங்கிணைப்பு குழுக்களில் பேசுவது மிக முக்கியமானது. 
 
அன்னபூர்ணா உரிமையாளர் நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டது குறித்த கேள்விக்கு:
 
இது பாஜகவின் அகங்காரத்தின் வெளிப்பாடு. வியாபாரிகள் மற்றும் சிறு தொழில் செய்பவர்களை இவர்கள் எப்படி பயமுறுத்
துகிறார்கள் என்பதற்கான எடுத்துக்
காட்டை நிதி அமைச்சரே காட்டி
யிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்.ஐ. சார்ந்த தொழில
திபருக்கே இந்த நிலை என்றால், அதை சாராத கொள்கை சம்பந்தப்பட்ட வேறு தொழில் செய்பவர்களின் நிலை என்னவாகும் என்பதை மிகத் தெளிவாக இப்போது காட்டி இருக்கிறார்கள். 
 
இது அம்பானி, அதானிக்கான அரசு என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சொல்வதை மீண்டும் நிரூபித்
திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்  கூறினார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?