திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கைது! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

சனி, 23 மே 2020 (07:11 IST)
திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இட ஒதுக்கீடு பற்றியும், நீதிபதிகள் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காககக் கைது செய்யப்பட்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர் எஸ் பாரதி, இட ஒதுக்கீடு என்பது திமுக போட்ட பிச்சை எனவும் அதனால் இப்போது ஒடுக்கப்பட்ட மக்கள் நீதிபதியாக இருப்பதாகவும் பேசினர். அவரின் இந்த பேச்சு பலத்த சர்ச்சைகளை எழுப்பிய நிலையில் பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இது சம்மந்தமாக அவர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் இப்போது அதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை அவர் வீட்டில் வைத்து காவலர்கள் அவரைக் கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் வெளியில போனால் கொரோனா..வீட்டுக்குள்ள பாம்பு...என்ன பண்ணறது ?