Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லயோலா கல்லூரி முன்னால் பேராசிரியர் கருத்துக்கணிப்பு: ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி?

Advertiesment
லயோலா கல்லூரி முன்னால் பேராசிரியர் கருத்துக்கணிப்பு: ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி?
, புதன், 13 டிசம்பர் 2017 (22:33 IST)
சமீபத்தில் சென்னை லயோலா கல்லூரி மாணவர்களின் கருத்துக்கணிப்பில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வெற்றி பெறுவார் என்றும், அவரை அடுத்து தினகரன் பெருவாரியான வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடிப்பார் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது சென்னை - லயோலா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் மக்கள் ஆய்வகத்தினர் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பின் முடிவின்படி டிடிவி தினகரன் 35.5% வாக்குகள் பெற்று பெறுவார் என்றும் அவருக்கு அடுத்த இடத்தை திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 28.5% வாக்குகளை பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனுக்கு 21.3% வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்றும் நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 4.6% வாக்குகளும், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 1.5% வாக்குகளையும் பெறுவார் என்று அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதி விடுதலை: சென்னை ஐகோர்ட் உத்தரவு