Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 4 April 2025
webdunia

ஆர்.கே.நகரில் 7.32 சதவீத வாக்குகள் பதிவு...

Advertiesment
R.K.Nagar by election
, வியாழன், 21 டிசம்பர் 2017 (09:36 IST)
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 
ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால், தொகுதி முழுவதிலும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 
மொத்தம் 258 வாக்குச்சாவடி மையங்களில் 1600 மின்னணு வாக்கு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், வாக்களித்தவர்களுக்கு எந்த சின்னத்தில் வாக்களித்தோம் என்ற ரசீது கொடுக்கும் மிஷினும் தயாராகவுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இன்று ஆர்.கேநகர் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் வாக்குப்பதிவின் சதவீதம் அதிகம் இருக்கும் என்று கருதப்படுகிறது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கும் முன்னதாகவே வாக்காளர்கள் பெரும் ஆர்வத்துடன் வரிசையில் வாக்களிக்க காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி 7.32 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மது விற்பனைக்கு தடை விதிக்க வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்