Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளை அறிக்கை தொடக்க புள்ளியா முற்றுப்புள்ளியா? ஆர் பி உதயகுமார் கேள்வி!

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (14:53 IST)
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல் அடிப்படையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள வெள்ளை அறிக்கையில், 
 
2011 ஆம் அதிமுக ஆட்சிக்கு வந்த போது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது. 2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் ரூ.2.28 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.  2021 ஆம் ஆண்டு அதிமுக அரசன் 10 ஆண்டு முடிவில் தமிழ்நாட்டின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது.
 
தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், நினைத்துப் பார்க்க முடியாத அளவில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடனை வாங்கி கட்டாயச் செலவு செய்யும் வகையில் மாநிலத்தில் நிதிநிலைமை சரிந்துவிட்டது. 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இந்த வெள்ளை அறிக்கை குறித்து  முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், "கொடுத்த வாக்குறுதியை செய்து கொடுப்பதற்கு இந்த வெள்ளை அறிக்கை தொடக்க புள்ளியா அல்லது  கொடுத்த வாக்குறுதி இருந்து தப்பித்துக்கொள்ள  இந்த வெள்ளை அறிக்கை முற்றுப்புள்ளியா என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments