Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த கல்வியாண்டில் காலாண்டு தேர்வும் ரத்து? அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2020 (07:35 IST)
தமிழகத்தில் கொரனோ வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது 
 
இந்த நிலையில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் தற்போது ஜூன் மாதம் முடிவடையும் நிலையிலும் பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை. அதுமட்டுமின்றி இப்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்பதும் நிலைமை ஓரளவுக்கு சரியானால் ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது 
 
இந்த நிலையில் கல்வித் துறை ஆணையர் பிஜி தாமஸ் தலைமையில் 18 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு அடுத்த ஆண்டு கல்வி ஆண்டு தொடங்குவது குறித்த பரிசீலனைகளை தமிழக அரசு கேட்டுள்ளது. இந்த நிலையில் இந்த குழு மாணவர் நலன் மற்றும் கற்றல் கற்பித்தல் ஆகியவைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளது
 
அந்த அறிக்கையில் செப்டம்பர் மாதம் வழக்கமாக நடைபெறும் காலாண்டு தேர்வை ரத்து செய்து, காலை மாலை என இரண்டு வேளை சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது, பாடத்திட்டங்களை குறைப்பது, ஆன்லைன் வகுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஆகிய பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
 
அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்த கல்வியாண்டில் காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments