Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீர் எந்திர கோளாறு; உயிர் தப்பிய பயணிகள்! – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (08:32 IST)
சென்னையிலிருந்து புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானம் இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நாள்தோறும் பல நாடுகளுக்கான விமானங்கள் வந்து செல்கின்றன. அந்த வகையில் இன்று சென்னையிலிருந்து டோஹா நகருக்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் ஒன்று 7 விமான ஊழியர்கள் உட்பட 146 பேரை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.

விமானம் கிளம்பி ஓடுபாதையில் பறப்பதற்காக சென்று கொண்டிருந்தபோது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டத்தை விமானிகள் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக விமானத்தை நிறுத்தியதுடன் விமான கட்டுபாட்டு மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். விமானி தக்க நேரத்தில் விமானத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது பரபரப்பு எழுந்துள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. இன்னும் குறையுமா? வாங்குவதற்கு சரியான நேரமா?

10 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் எலும்புக்கூடு.. நோக்கியா போனை வைத்து இறந்தவர் அடையாளம் கண்டுபிடிப்பு..!

டெஸ்லா கார் முதல் ஷோரூம் இன்று இந்தியாவில் திறப்பு: மாடல் Y கார் பற்றிய விவரங்கள்!

மகள் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் அம்மாவும் தூக்கு போட்டு தற்கொலை.. சோக சம்பவம்..!

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு.. சேலம் அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments