Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவு: புரட்சி பாரதம் அறிவிப்பு

Advertiesment
40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவு: புரட்சி பாரதம் அறிவிப்பு

Mahendran

, புதன், 3 ஏப்ரல் 2024 (13:18 IST)
திமுக கூட்டணியில் தொகுதியே கொடுக்காமல் இருந்தாலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு தருவது போல் அதிமுக கூட்டணியிலும் தொகுதி பெறாமல் 40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவு என புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார் 
 
மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் தராததால் வருத்தத்தில் இருந்தோம் என்று கூறிய பூவை ஜெகன்மூர்த்தி, எங்கள் கட்சி தொண்டர்கள் அதிமுகவுடன் கூட்டணி தொடரலாம் என்று கூறியதால் 40 தொகுதிகளிலும் புரட்சி பாரதம் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளார் 
 
வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகள் கேட்டு அதிமுகவிடம் புரட்சி பாரதம் கட்சி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அந்த கட்சிக்கு ஒரு தொகுதி கூட வழங்கப்படவில்லை என்றும் அதனால் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி அதிமுக தலைமை மீது வருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டது 
 
ஆனால் தற்போது திடீரென அவர் மனம் மாறி 40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அவர் கூறியிருப்பதால் அவருக்கு 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாருக்கு ஓட்டு போட வேண்டும்? நடிகர் விஜய்சேதுபதியின் வைரல் வீடியோ..!