Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோதண்ட ராமர் பஜனை திருக்கோயிலில் புரட்டாசி மாத உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது....

Advertiesment
கோதண்ட ராமர் பஜனை திருக்கோயிலில் புரட்டாசி மாத உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது....

J.Durai

, செவ்வாய், 22 அக்டோபர் 2024 (12:06 IST)
புரட்டாசி மாதம் நிறைவு பெற்றதை முன்னிட்டு விரதம் பிடித்தவர்கள் அனைவரும் நேற்றுடன் விரதத்தை முடித்துள்ளனர். இந்நிலையில் கோவை தடாகம் அடுத்த நெ.24 வீரபாண்டி பகுதியில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் பஜனை திருக்கோயிலில் வருடாந்திர புரட்டாசி மாத உற்சவ நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் சீதாலட்சுமி சமேத கோதண்ட ராமர், பொன்னம்மாள் சமேத ஸ்ரீ அட்டி தொட்டராயர், ஐயா சுவாமி ஆகிய மூன்று தெய்வங்களும் எழுந்தருளினர். 
 
  மேலும் கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று திருவீதி உலா நிகழ்வும் உற்சாகமாக நடைபெற்றது. 
 
இந்நிகழ்வில் வீரபாண்டி கிராம பொதுமக்கள் கிருஷ்ண லீலா பிருந்தாவன் பஜனை குழுவினர் ஒன்றிணைந்து பக்தி பாடல்களை பாடினர். மேலும் கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் அபிஷேகங்கள் வழங்கப்பட்டன.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்தலைமையில் 63 குண்டுகள்முழங்ககாவலர் வீர வணக்க நாள் கடை பிடிக்கப்பட்டது