புன்னம் சத்திரம் சேரன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட சதுரங்க போட்டிக்கு தகுதி

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (19:30 IST)
சின்னதாராபுரம் குறுவட்ட  அளவிலான  சதுரங்க  விளையாட்டு போட்டிகள் புன்னம் சத்திரம் சேரன் உடற்கல்வியியல்  கல்லூரியில் நடைபெற்றது.


 

 
இப்போட்டியை  நிர்வாக அலுவலர்   கே.கணபதி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கே.தேவராஜன் சேரன் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் எம்.ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி போட்டியைத் துவக்கி வைத்தனர். 
 
இதில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில்  இருந்து மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் புன்னம் சத்திரம் சேரன் மேல்நிலைப்பள்ளியைச்  சார்ந்த எஸ்.சோனியா 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதல் இடமும் ,எம்.வினிதா 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இரண்டாம் இடமும் , ஜி.மேனகா   14 வயதுக்குட்பட்டோர் பிரிவில்  மூன்றாம் இடமும், பி.பார்த்த சாரதி 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மூன்றாம் இடமும் பெற்றனர். 
 
வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளியின்  தாளாளர்  கே.பாண்டியன்  மற்றும்  கல்வி நெறியாளர் டாக்டர் குணசேகர் ஆகியோர் பாராட்டினர்.

சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் முடித்துவிட்டு சென்னை திரும்ப சிறப்பு ரயில்!.. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!...

ஈரானை தாக்கினால் கடும் விளைவு!.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ரஷ்ய அதிபர்...

கரூரில் நடந்த சதி!. சிபிஐ விசாரணையில் சொன்ன விஜய்!... டெல்லியில் நடந்தது என்ன?...

இது சும்மா டீசர்தான்!.. மெயின் பிக்சர் இருக்கு!.. விஜய்க்கு செக் வைக்கும் டெல்லி வட்டாரம்!...

நாய்கள் இல்லா கிராமம் என தேர்தல் வாக்குறுதி.. 500 நாய்களை கொன்ற 7 கிராம தலைவர்கள் மீது வழக்குப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments