பஞ்சாப் ராணுவ முகாமில் நேற்று துப்பாக்கி சூடு நடந்த நிலையில் நான்கு பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமில் நேற்று அதிகாலை திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் நான்கு வீரர்கள் பலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பஞ்சாப் போலீசார் மற்றும் ராணுவ போலீசார் விசாரணை நடத்தியதில் துப்பாக்கி சூடு நடத்தியது யார் என்பதை கண்டுபிடிக்க விசாரணை நடந்து வருவதாகவும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த துப்பாக்கி சூட்டில் சாகர் பன்னே, 25, கமலேஷ், 24, யோகேஷ் குமார், 24, சந்தோஷ் நாகரால், 25 ஆகிய நான்கு பேர்கள் என தெரிய வந்துள்ள நிலையில் அவர்களில் கமலேஷ் சேலம் மாவட்டம் மேட்டூர் வனவாசி அருகே உள்ள பனங்காட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
பஞ்சாப் ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் தமிழர் என்ற செய்தி தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது