Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலாவிடம் மனகுமுறலை கொட்டிய புகழேந்தி: நெக்ஸ்ட் மூவ் என்ன?

Advertiesment
டிடிவி தினகரன்
, செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (14:59 IST)
நேற்று கட்சியே என்னுடையதுதான் என பேசிய புகழேந்தி இன்று கட்சி பாதியாகிவிட்டது என வேதனை தெரிவித்துள்ளார்.
 
அமமுக கட்சியை சேர்ந்த புகழேந்தி, அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் குறித்து பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து டிடிவி தினகரனிடம் கேட்ட போது, புகழேந்தி விவகாரம் குறித்து தீர விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.  
 
சொன்னதற்கு ஏற்ப, அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் பெயர் பட்டியலில் அமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது; கட்சியே என்னுடையது. அமமுகவை ஆரம்பித்ததில் நானும் ஒருவன், யாரையும் நம்பி நான் இல்லை என அதிரடியாக பேட்டி அளித்தார். 
அதனைத்தொடர்ந்து இன்று மீண்டும் செய்தியாளரளுக்கு பேட்டி அளித்த அவர் பின்வருமாறு பேசினார். நேற்று செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் என்னுடைய பெயர் விடுபட்டு இருந்தது. என்னை நீக்கி விட்டேன் என்று தினகரன் என்னிடம் சொல்லவில்லை. 
 
மண்டல பொறுப்பாளர்களால் இந்த இயக்கம் பாதி அழிந்து விட்டது. மாற்று நிர்வாகிகளை நியமிக்க வேண்டிய கட்டயாத்தில் கட்சி இருக்கிறது. 42 தொகுதியை ஒரே நிர்வாகி கவனித்தால் கட்சியை எப்படி நடத்த முடியும்?
சசிகலாவை சிறையில் சந்தித்து நிறைய பேசினேன். நான் எந்த கட்சிக்கும் போவதாக இல்லை. அதுபோன்ற முடிவை நான் எடுக்கவில்லை. டிடிவி தினகரன் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். 
 
அமமுகவில் இருந்து அதிமுகவிற்கு செல்பவர்களுக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படாமல் அரசியல் நம்பிக்கையற்றவர்களாக மட்டுமே பார்க்கப்படுகிறார்கள் என பேசியுள்ளார். 

டிடிவி தினகரன் அமைதியாய் இருந்தபடி புகழேந்தியை கட்சியில் இருந்து ஓரம்கட்டியது போல, இப்பொழுதும் ஏதேனும் நடைவடிக்கை எடுப்பாரா அல்லது விஷயம் சசிகலா வரை சென்றதால் அப்படியே விட்டுவிடுவரா என்பத இனி வரும் நாட்களில் தெரியும்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 மற்றும் 8 ம் வகுப்புக்கு பொது தேர்வு இப்போ கிடையாது.. ஆனால்?! – அமைச்சர் அறிவிப்பு