கிறிஸ்தவ பெண்களை இழிவாக பேசிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்! – புதுக்கோட்டையில் கைது!

Webdunia
ஞாயிறு, 30 ஜனவரி 2022 (11:51 IST)
புதுக்கோட்டையில் கிறிஸ்தவ பெண்களை மதமாற்றம் செய்ய வந்ததாக தகாத வார்த்தைகளால் பேசிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சமீப காலமாக மதரீதியான மோதல்களை தூண்டும் விதமான சமூக வலைதள கருத்துகள் மீது காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கு ஒன்றில் சமீபத்தில் பாஜக பிரமுகர் மனோஜ் செல்வம் கைது செய்யப்பட்ட நிலையில் மத வெறுப்பு, பொது அமைதியை குலைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை என காவல் ஆணையர் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளராக பதவி வகித்து வரும் கணேஷ்பாபு என்பவர் அப்பகுதியில் சில கிறிஸ்தவ பெண்களை மதமாற்றம் செய்ய வந்ததாக கூறி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கணேஷ்பாபு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு உடந்தையாக இருந்த 20க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருடன் கூட்டணி?.. அதிமுகவா? காங்கிரஸா?.. விஜய் போடும் அரசியல் கணக்கு!..

தமிழக அரசு பேருந்து டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் இயக்க ஒப்புதல்.. சேவை தொடங்குவது எப்போது?

ஓபிஎஸ்க்கு ஒருபோதும் அதிமுகவில் இனி இடமில்லை.. பாஜகவுக்கு 30 தொகுதிகள்: சேலம் மணிகண்டன்

ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு மையத்தில் மெஸ்ஸி.. யானையுடன் கால்பந்து விளையாடினார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments