Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொது இடங்களில் அலப்பறை செய்த டிக்டாக் டான்ஸர்: கைது செய்த போலீஸ்!

Advertiesment
பொது இடங்களில் அலப்பறை செய்த டிக்டாக் டான்ஸர்: கைது செய்த போலீஸ்!
, வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (11:10 IST)
Tik Tok
புதுக்கோட்டையில் பொது இடங்களில் டான்ஸ் ஆடி பொதுமக்களை தொல்லை செய்யும் டிக்டாக் டான்ஸரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர் டான்ஸ் ஆடுவதில் மிகவும் ஈடுபாடு உள்ளவராக இருந்திருக்கிறார். அடிக்கடி தனது நடன வீடியோக்களை டிக்டாக்கில் வெளியிட்டு வந்த அவர் அதிக லைக்ஸ் பெற நூதனமான முறை ஒன்றை பின்பற்றியுள்ளார்.

மக்கள் நடமாடும் பேருந்து நிலையம், மார்க்கெட் போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கு மக்களிடையே டான்ஸ் ஆடுவது, பெண்கள் மேல் மோதுவது போல பக்கத்தில் சென்று ஆடுவது என்று பல சேட்டைகளில் ஈடுபட்டுள்ளார். அவற்றை டிக்டாக்கில் பதிவு செய்து லைக்குகளையும் அள்ளியுள்ளார்.

கண்ணனின் அலப்பறைகள் தாங்க முடியாமல் மக்கள் கடுப்பில் இருந்த நிலையில் இதுகுறித்து விபரமறிந்த புதுக்கோட்டை போலீஸார் பொதுமக்களை இடையூறு செய்ததற்காக கண்ணனை கைது செய்துள்ளனர். விசராணையில் இவர் புதுக்கோட்டையில் மட்டுமல்லாமல் திருச்சி, தஞ்சாவூர் என பல பகுதிகளுக்கும் சென்று இதுப்போன்ற சேட்டைகளில் ஈடுப்பட்டது தெரிய வந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

32 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை: அதிர்ச்சியில் மக்கள்!