Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காட்டுபகுதியில் பானுமதி... அருகில் இருந்த செருப்பும் தொப்பியும் துப்பு கொடுக்குமா?

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (17:26 IST)
புதுகோட்டையில் ஆர்.எஸ் பதி காட்டுப்பகுதிக்குள் ஆடு மேய்க்க சென்ற பெண் வெட்டுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக இடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூரை சேர்ந்த முருகேசனின் 2வது மனைவி பானுமதி. இவர் வழக்கமாக ஆர்.எஸ் பதி காட்டுப்பகுதிக்குள் ஆடு மேய்க்க செல்வார். எப்போதும் போல சம்பவ நாளன்று பானுமதி ஆடு மேய்க்க சென்றுள்ளார். 
 
ஆனால், மாலை பொழுது ஆடுகள் மட்டும் திரும்பிவர சந்தேகமடைந்த குடும்பத்தார் காட்டிற்குள் சென்று பானுமதியை தேடியுள்ளனர். அப்போது பானுமதி உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
இது குறித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் பானுமதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அந்த பகுதியை சோதனையிட்ட போது அங்கு செருப்பும் தொப்பியும் கிடந்துள்ளது. 
 
செருப்பையும் தொப்பியையும் கைப்பற்றிய போலீஸார் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments